Friday, August 26, 2011

முத்தம் - சில குறிப்புகள்

என்னுடையது
குழந்தைக்கான அப்பாவின் முத்தம்
உன்னுடையது
அப்பாவிற்கான குழந்தையின் முத்தம் .

*****************************************

உண்மையில் முத்தம் என்பது
போன முத்தத்தின் தொடர்ச்சி
அடுத்த முத்தத்தின் ஆரம்பம்

*****************************************

என் வாழ்வில்
ஒவ்வொரு நாளும்
உன் முத்தத்தால் ஒளிஏற்றப்பட்டு
உன் முத்தத்தால் ஊதி அணைக்கப்படுகிறது .

*****************************************

தீராக் காதலென்பது
சேய்மையில் நினைவுகளும்
அண்மையில் உதடுகளும் சேர்ந்திருப்பது .

****************************************

ஒவ்வொருவரின்
நினைவறைகளில் இருக்கிறது
காலப்போக்கில் மறைந்துபோன
முதல்களின் வரிசை.
எப்போதும் பசுமையை
முதல் முத்தம் .

*****************************************

முத்தம்
மௌனத்தை உடைக்கவும்
உண்டாக்கவும் .

*****************************************

தனிமை கணங்களை விடவும்
உறவுகளின் கூட்டத்தில்
பொய்யாய் வேலைசொல்லி
கதவின் பினனால் நீ தரும்
முத்தத்தின் சத்தம் குறைவு
ஆயுள் அதிகம் .

*****************************************

மூன்று மட்டும் என்று சொல்லி
கன்னத்தில் இரண்டு
நெற்றியில் ஒன்றிற்கு பிறகு
இறங்கிவந்தாள் இதழுக்கும் .

*****************************************

முத்தம்
நம் சந்திப்புகளின் அந்தாதி.

****************************************

பத்து முத்தங்களை வாங்கிகொண்டு
ஒற்றை முத்தம் தரும்
குழந்தை நீ .

***************************************

என்ன செய்தாலும்
சிணுங்கும் உன்னை அமைதிப்படுத்கிறது
ஒற்றை முத்தம் .

**************************************

ஒவ்வொருமுறையும்
ஒவ்வொரு மாதிரி இருபதாலென்னவோ
தொடர்ந்துகொண்டே இருக்கிறது முத்தம் .

*************************************

கூட்டம்நிறைந்த வீட்டின்
கதவின் பின்னால்
யாருமற்ற கிணத்தடி
திரைசீலை மறைவுகள்
குளியலறை கணவனின் குரல்
என எங்கும்
தன்னைத் தேடி அலைகிறது
முத்தம் .

*************************************

No comments:

Post a Comment